Saturday, June 25, 2011

Pin It

1. ஆசீர்வதியும் கர்த்தரே

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உத்தியும் சுத்தரே நித்தம் மகிழவே 
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே 
மேசியா என் மணவாளனே 
ஆசாரியரும் வான் ராஜனும் 
ஆசிர்வத்திடும் 
1. இம் மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும் 
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும் 
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே 
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமமே 
உம்மிலே தங்கிதரிக்க 
ஊக்கமருளுமே 

2.ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே 
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே 
வீற்றாலும் நீர் ஏக ராஜனாய்
ஏற்ற வான்ராயர் சேயர்க்கே 
ஒப்பாய் ஒழுகவே 

3.பூதல ஆசிர்வாதத்தால் பூரணமாகவே 
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் 
மாதிரளாக இவர் சந்ததியார் 
வந்துதித்தும்மை பிரஸ்தாபிக்க 
தேவ கிருபை தீர்மானம் 
ஆம் போல் அருளுமேன்

0 comments

Post a Comment

ShareThis3

Download